• Latest News

    May 03, 2019

    பயங்கரவாதிகள் பற்றி தகவல் வழங்கிய மூவருக்கு தலா 10 லட்சம் ரூபா வெகுமதி

    சாய்ந்தமருதில் தற்கொலைக் குண்டுதாரிகள் பதுங்கியிருந்தமை தொடர்பில் தகவல் வழங்கிய பொதுமகன்கள் மூவருக்கு தலா 10 இலட்சல் ரூபா பணப்பரிசில் வழங்கப்படவுள்ளது என
    பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

    பயங்கரவாதிகள் தொடர்பில் தகவல் வழங்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் சார்ஜனாக பதவி உயர்த்தப்படுவதோடு அவருக்கு 5 இலட்சம் ரூபா பணப்பரிசில் வழங்கப்படவுள்ளது என்றும் பொலிஸ்
    ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

    ஏனைய இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கும் தலா 5 இலட்சம் ரூபா பணப்பரிசில் வழங்கப்படவுள்ளது.

    பயங்கரவாதிகள் தொடர்பான தகவல் வழங்கிய முஸ்லிம் குடிமகன்கள் மூவருக்கு தலா 10 இலட்சம் ரூபா பணப்பரிசில் வழங்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

    பொலிஸ் தலைமையகத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப்
    பேச்சாளர்இ பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இந்த விடயங்களை தௌிவுபடுத்தினார்.

    இதேவேளைஇ நாடுமுழுவதும் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புத் தேடுதல்களில் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் ரீசேட்கள் வங்கி பற்றுச்சீட்டுக்கள் மற்றும் தடுப்பூசிகள் (இலங்கையில் கிடைக்காத வகை) என்பன மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
    இந்த சந்தேகத்துக்குரிய பொருள்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் மீட்கப்பட்டவையாகும் என்றும்
    அவர் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பயங்கரவாதிகள் பற்றி தகவல் வழங்கிய மூவருக்கு தலா 10 லட்சம் ரூபா வெகுமதி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top