• Latest News

    May 03, 2019

    கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக் கழக மாணவர்களை தடுப்பு காவலில் வைத்து விசாாிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது

    யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணை நடத்த பாதுகாப்பு அமைச்சுக்கு கோப்பாய் பொலிஸார் விண்ணப்பித்துள்ளனர்.
    “யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்று படையினரால் சுற்றிவளைப்புத் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 
    பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் ஒன்றியத்தின் அலுவலகத்தை சோதனையிட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், மாவீரர்களின் படங்கள் மற்றும் தமிழீழ வரைபடங்கள் மீட்கப்பட்டன. இதனால் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை இராணுவத்தினர் கைது செய்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
    கைது செய்யப்பட்டவர்களின் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இராணுவ அதிகாாியால் ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  இதற்கு அமைவாக  மாணவர்கள் இருவரையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கேட்டுள்ளதாக   பொலிஸார் தெரிவித்தனர்.
    இதேவேளை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மாணவர்கள் இருவரையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சோ. சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இன்று நேரில் சென்று சந்தித்தனர். மாணவர்கள் தொடர்பில் சட்ட மா அதிபருடன் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தொிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக் கழக மாணவர்களை தடுப்பு காவலில் வைத்து விசாாிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top