ஏப்பிட்டமுல்ல பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் விடுதலைப் புலிகள் அமைப்பால் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 193 துப்பாக்கி ரவைகளும், 89 ரக ஆர்.ஜி.பி ரவையொன்றும் மீட்கப்பட்டுள்ளன.
இதன் போது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மிாிஹன பொலிஸார் தொிவித்துள்ளனர்.
குறித்த வீட்டிலிருந்த பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த ரவைகள் பழங்காலப் பொருட்களாக அவற்றை வீட்டின் அலங்காரப் பொருட்களாக பயன்படுத்துவதற்காக கொண்டு வந்ததாக அப்பெண் தொிவித்துள்ளார்.
வீட்டின் மேல் மாடிக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த படி வாிசையின் கீழ் உள்ள அலுமாாி ஒன்றில் சிறுசிறு பைகளில் சுற்றப்பட்டு புலி இலட்சினையுடனான பொிய பை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment