• Latest News

    May 05, 2019

    கொக்குவிலில் பாடசாலை ஒன்றில் வாள்கள் மீட்பு

    யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலையொன்றிலிருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
    அத்துடன், கொக்குவில் வராகி அம்மன் ஆலயப் பகுதியிலும் வாள் ஒன்று வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
    பாடசாலைகளின்  மேல் பிரிவுகளை நாளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று பொலிஸாரால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
    இதில் மேற்படி பாடசாலையின் இன்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் பாடசாலையின் மண்டபம் ஒன்றில் மேல் மாடியில் இருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
    இதேவேளை, கொக்குவில் வராகி அம்மன் கோவிலடியில் வாள் ஒன்று வீசப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் அதனை மீட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொக்குவிலில் பாடசாலை ஒன்றில் வாள்கள் மீட்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top